"நற்பவி " படம் மூலம்
இன்னொரு நடன இயக்குனர் கதாநாயகனாகிறார் |

பிரபுதேவா, லாரன்ஸ், அரிகுமார், தினேஷ் , நடன மாஸ்டர்களை அடுத்து ஜாய்மதி என்ற நடன மாஸ்டர்" நற்பவி " படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நூறு படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக பணிபுரிந்து , குறும்படங்களில் நடித்தும்,இயக்கியும் அனுபவம் பெற்றவர்தான் ஜாய்மதி. 
60 வருடங்களுக்கு முன்னர் சிவாஜி கணேசன் - சாவித்திரி, ஜெமினி கணேசன், எம்.என்.ராஜம், ஆகியோர் நடித்து வெள்ளி விழா கண்ட " பாசமலர்" படத்தை தயாரித்தவரும் ,ஜாய் மதியின் சின்ன தாத்தாவுமான , காலம் சென்ற தெய்வத்திரு. எம்.ஆர். சந்தானம் அவர்களின் நல்லாசியுடன் எம்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் " நற்பவி "படத்தில்தான் ஜாய் மதி கதாநாயகனாக அறிமுகமாகிறார் .
ஜாய் மதியுடன் ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ், ஈஸ்வர் சந்திரபாபு, ஷர்மிளா, யாசர், தர்ஷன், நதீம், முல்லை, கோதண்டம், ஜெமினிபாலு இன்னும் பலர் நடிக்கின்றனர்.
விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ராம்நாத் படத்தொகுப்பையும், தயானந்த் பிறைசூடன் இசையையும், எம்.ஜி.ஆர். நம்பி/தயானந்த் பிறைசூடன் இருவரும் பாடல்களையும் எழுத, எஸ்.ஆர்.அரிமுருகன் சண்டைப் பயிற்சியையும், நாயகனாக நடிக்கும் ஜாய் மதியே நடன பயிற்சியையும், மணிமாறன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

சென்னை, மதுரை, ராசக்காபட்டி, கிருஷ்ணகிரி, நாட்ராம்பள்ளி, ஆலப்புழா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்தப் படத்தின் கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.ஜே. திவாகர் படத்தைப் பற்றி கூறுகையில், " நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். அப்படி விவசாயம் செய்துவரும் கதாநாயகன் ஜாய்மதிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்கிடையில் முறைப்பெண்ணின் காதல், இவரை விரும்பும் இன்னொரு பெண், கோவில் திருவிழா, கிராமத்தின் முன்னேற்றம் என பல்வேறு பிரச்சனைகளை கதாநாயகன் சமாளிக்க போராடும் நிலையில் ஒரு கொலை பழியும் நாயகன் மீது விழுகிறது. இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நாயகன் வாழ்வில் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. இப்படி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் படத்தை இயக்கி உள்ளேன்." என்று கூறினார்.
விரைவில் திரைக்கு வர  உள்ளதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

விஜயமுரளி
PRO

Comments

Popular posts from this blog