Posts

Showing posts from November, 2022
Image
*என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில்  மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம்* ப்ரைமில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்கு குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக் களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். தமிழகத்தில் குமரன் தங்கராஜன் நன்கு பரிச்சியமான நடிகர்தான். அவரை 'வதந்தி' ட்ரெய
Image
*உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* *சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு,
Image
சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகாத்தொடர் இனியா.              Sun Tv-ல் டிசம்பர் - 5 முதல் திங்களிலிருந்து  சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது          சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் மீண்டும் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. உங்கள் SUN TV – ல் வரும் டிசம்பர் 5 ந்தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு  ஒளிபரப்பாக இருக்கிறது.           கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள்.                     ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா,      ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலிஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்
Image
*விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது.* - *இயக்குநர் ரிஷிகா சர்மா* *மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம் தான் ‘விஜயானந்த்’* - *பாடலாசிரியர் மதுரகவி* *“சினிமா என்பது கலை. வியாபராமல்ல”* - *நாயகன் நிஹால்.* சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் ந
Image
திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !! பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வரு கிறார்கள்.   இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் பணிபுரிந்து பிரபலமானவர்  ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள்   இருக்கின்றனர். இவர்களின் 10வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ர
Image
*இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின்  'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி* கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், விவேக் பிரசன்னா, குமரன்
Image
சில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் "டேலண்ட்" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரத்தில் கேரளாவில் தொடங்க உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது இதில் நாயகியாக ராசியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு ,தினேஷ் ,கார்த்திக் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்... தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் அலெக்சாண்டர் இசை அம்ப்ரோஸ் நடனம் பிரான்சிஸ்.... இப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறுகையில் ... தேசிய அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கும் தனது தந்தை சில சந்தர்ப்ப சூழ்நிலையால் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் படுக்கையே கதி என்று வாழ்கிறார் அதனால் தனது வறுமையை போக்கவும் அப்பாவைப் போல் தானும் ஒரு நல்ல கால்பந்து வீராங்கனையாகி நாட்டுக்கு பெருமை சேர்க்க  முய
Image
*நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு* நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்... ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்... என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
Image
*"வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது" -  புஷ்கர்- காயத்ரி !!* வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர்  பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக  சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.  வதந்தி தொடர், இளமமையும்  அழகுமான  வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்த தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த  போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.  பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் ப
Image
பட்டத்து அரசன் - விமர்சனம் மிகப்பெரிய கபடி வீரராக இருக்கும் ராஜ்கிரண்  மகன், மகள், பேரன், பேத்தி என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியும், அவருடைய மகனும் இறந்து விடுகிறார். அவருடைய மருமகள் ராதிகா. ராதிகாவின் மகன் அதர்வா. பழைய குடும்ப சண்டையினால் ராதிகா, அதர்வா தனியாக வசித்து வருகிறார்கள் அதர்வா இரண்டு குடும்பத்தினையும் ஒன்று சேர்க்க போராடி வருகிறார்.அவரது போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்து வருகிறது இதற்கிடையே, ஊரே கொண்டாடிய ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்துவதோடு, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்காக கபடி விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.  கபடி விளையாடத் தெரியாத அதர்வா  தாத்தா குடும்பம் மீது விழுந்த பழியை போக்க  ஊருக்கு எதிராக ஒரு சவால் விடுகிறார். அந்த சவால் என்ன?  சவாலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே பட்டத்து அரசன்’  படத்தின் கதை. துடிப்பான கிராமத்து இளைஞனாக அசத்தியுள்ளார் அதர்வா. சண்டைக்காட்சிகளில் பத்து பேரை ஒற்றை ஆளாக அடித்தாலும் நம்பும்படியாக அத
Image
“நோக்க நோக்க”  - விமர்சனம் திகில் மர்மம் நிறைந்த  திரைப்படம் நோக்க நோக்க... தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அர்ஜுன் சுந்தரம், சிந்தியா இருவரும் காதலித்து வருகிறார்கள் வேலை விஷயமாக  நாயகன் வெளியூர் செல்கிறார்.  நாயகி  மட்டும் தனியாக தங்கி இருக்கும் அந்த வீட்டில் குழந்தை பேய் ஒன்று பயமுறுத்துகிறது . இதே வேளையில் பிரபலமான  இருவர்  கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலை பலி  நாயகி மீது விழுகிறது. இறுதியில் சிறுமி பேய் எதற்காக நாயகியை  துரத்துவதற்கான காரணம் என்ன? என்பதே  “நோக்க நோக்க” படத்தின் மீதிக்கதை. நாயகன் அர்ஜுன் சுந்தரம் பார்ப்பதற்கு அழகாவும் நடிப்பில் புதியவர் போன்று தோன்றாத விதத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் . நாயகி சிந்தியா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நேர்மையான நிருபர்  ஜோதிராய்  அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். செய்யும் வேலையை துணிச்சலாக செய்யும் வீர பெண்ணாக நடித்திருக்கிறார். சிறுமி பேயாக வந்து நடிப்பில் மிரட்டுகிறார். கொலை வழக்கை  துப்பறியும் அதிகாரியின் உதவியாளராக மக்கள் தொடர்பாளர் கணேஷ் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறா

சன்னி தியோல் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ (Chup: Revenge of The Artist) படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 அறிவித்துள்ளது.

Image
சன்னி தியோல் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ (Chup: Revenge of The Artist) படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 அறிவித்துள்ளது. ~டாக்டர் ஜெயந்திலால் கடா (PEN Studios) தயாரிப்பில், R. பால்கி எழுதி இயக்கிய, இந்த உளவியல் த்ரில்லர் ஜீ5-ல்- 25 நவம்பர் 2022 அன்று ஸ்ட்ரீம் ஆகிறது.~ ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில், சன்னி தியோல், துல்கர் சல்மான் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இந்த திரைப்படத்தில் பூஜா பட் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு கேமியோவில் நடித்து இருக்கிறார். திரையரங்க்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவே
Image
ரவுடியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு? குணா. இந்த பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலைநடுங்கும். ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வந்தாள்.அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்துவந்தனர்.  அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். தங்கைக்கு அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை. ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை பதினெட்டு வயதை க டந்தாள். இந்த நாளுக்காக காத்திருந்த தங்கை அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் முடியவில்லை. தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்கினான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வந்தாள். தனது அண்ணன் ரவுடியாக இருப்பதால்  தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கதிரிடம் கூறுகிறாள். தங்கையை அண்ணனிடம் பேச வைத்து இருவரின் மனதில் உள்ள கசப்பான எண்ணத்
Image
*'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெறும் 'பாஸ் பார்ட்டி..' பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு* *'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பாஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு* ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ 'மெகா ஸ்டார்&#
Image
*மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு.. வசூல் மழையை குவிக்க போவது யார்? வைரலாகும் பதிவு.!!*  மாயோன் OTT-ரிலீஸ்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.  தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன்.  கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  ஆன்மீகம் மற்றும் அறிவியல் என இரண்டை ஒரு சேர இணைத்து பேசிய இந்த படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்' திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்
Image
*மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு.. வசூல் மழையை குவிக்க போவது யார்? வைரலாகும் பதிவு.!!*  மாயோன் OTT-ரிலீஸ்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.  தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன்.  கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  ஆன்மீகம் மற்றும் அறிவியல் என இரண்டை ஒரு சேர இணைத்து பேசிய இந்த படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்' திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்
Image
*மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு.. வசூல் மழையை குவிக்க போவது யார்? வைரலாகும் பதிவு.!!*  மாயோன் OTT-ரிலீஸ்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.  தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன்.  கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  ஆன்மீகம் மற்றும் அறிவியல் என இரண்டை ஒரு சேர இணைத்து பேசிய இந்த படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்' திரைப்படம், சிறந்த புராணங்களு
Image
*இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் 'ஹனு-மேன்' டீசர் வெளியீடு* *நடிகர் தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியீடு* *பான் இந்திய திரைப்படமான 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியீடு* இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா  நடிப்பில் 'ஹனு-மேன்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனு-மேன்' படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் ப
Image
*சரிகம'வின் ஒரிஜினல்ஸ் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு* இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும்  வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் வலம் வரும் 'பட்டிமன்றம்' எனும் விசயத்த