Posts

Showing posts from June, 2022
Image
*விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா* 'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். 'டான்' பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார். ஒப்பனைக்காக தேசிய விருதுப்பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்த படத்தில் சிறப்பு ஒ
Image
*‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்* *கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய 'மாயோன்' பட குழு* டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார். தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 'மாயோன்'. எளிதில் யூகிக்க இயலாத  திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக  பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் 'மாயோன்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட
Image
*ஆன்மீகமும் அறிவியலும் கலந்த 'மாயோனை'ப் பாராட்டிய புரட்சி நடிகர் சத்யராஜ்* *ரசிகர்களின் கைதட்டல்களை பெற்ற 'மாயோன்' படக்குழுவினர்* *ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு - சத்யராஜ் பெருமிதம்* *'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ்* *தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'மாயோன்'* தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கத
Image
*அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.* இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும்.  அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும். அது போல் தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே  அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும். இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட  படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது  அவ்வளவு எளிதான காரியமில்லை.    2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் டி.இமான். இந்த இருபது ஆண்டுகளில் எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான இசை பயணம் இவருடையது. மெலடியா?, குத்துப்பாடலா?
Image
பட்டாம்பூச்சி  -  விமர்சனம் அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிப்பில்  பத்ரி நாராயணன் இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி  நடிப்பில் வெளியாகி இருக்கும்   ‘பட்டாம் பூச்சி’ தூக்கு தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் இருக்கும் ஜெய், தன்னைப் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர் ஹனி ரோஸை சந்திக்க விரும்புகிறார்   தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன், தான் வேறு பல கொலைகள் செய்துள்ளதாகவும் கூறி அதிர வைக்கிறார். இந்த தகவல் பத்திரிக்கையில் வெளியானதும் அவரது தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர் செய்த கொலைகளை பற்றி ஒரு மாத கால அவகாசத்திற்குள் இதை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.. காவல்துறை அந்த பொருப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் ஒப்படைக்கிறது. விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி-யிடம் உண்மையை சொல்ல சில கண்டிஷன்களை போடும் ஜெய், அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது புத்திசாலித்தனத்தால் தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த சுந்தர்.
Image
மாயோன் - விமர்சனம் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வரும் நாயகன் சிபி சத்யராஜ் சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து கோவில் புதையல்களை வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள் மற்றொரு புறம் சிலை கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வருகிறார்கள். இந்நிலையில், மாயோன் மலையில் இருக்கும் கோயிலில் ரகசிய அறை இருப்பதாகவும், அதற்குள் புதையல் இருப்பதாகவும் ஹரிஷ் பெராடிக்கு தகவல் வருகிறது. அந்த புதையலை எடுக்கும் பணியை சிபி சத்யராஜுக்கு ஹரிஷ் பெராடி கொடுக்கிறார். அந்த கோவிலுக்குள் செல்லும் சிபி சத்யராஜுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் சிபி சத்யராஜ் கோவிலுக்குள் சென்று புதையலை எடுத்தாரா? .இல்லையா? என்பதே  மாயோன் படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், . தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன்  கே.எஸ்.ரவிக்குமார், ஹரீஷ்பேரடி, ராதாரவி, பக்ஸ், மாரிமுத்து உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். அனுபவ நடிகர்கள் என்பதால் காட்சிகளிலும் அது நிறைந்து படத்துக்குப
Image
வேழம்  - விமர்சனம் K4 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில்  அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி ஆகியோர் நடிப்பில்  வேழம் சைக்கோ கொலையாளியால் வனத்துறை அமைச்சரின் இளைய மகன் ஊட்டியில் கொலை செய்யப்படுகிறார்.  அசோக் செல்வனின்  காதலி ஐஸ்வர்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார். இச்சம்பவம் நடந்த இடத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் கொலையாளி யார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத ஏற்படுகிறது., கொலை நடந்த இடத்தில் கேட்ட ஒரே ஒரு குரல் ஒலியை மட்டுமே வைத்துக்கொண்டு கொலையாளியை தேடி செல்லும் அசோக் செல்வனுக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கிறது.. இறுதியில் அசோக் செல்வன் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே வேழம் படத்தின் மகதை.  நாயகனாக  நடித்திருக்கும் அசோக் செல்வன், அதிரடி  கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  குற்றவாளியை கண்டுபிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது  நாயகிகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என  இருவரும் கதையுடன் பயணிக்கும் கதாப்பாத்திரங்களாக இருப்பதோடு, நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல
Image
நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் "நாதிரு தின்னா" பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படத்தை நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி ஆகியோருடன் தரு ண் மாஸ்டரும் நடித்துள்ளார். ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார் இருவரின் பாடல்களுக்கு முரளீதர் ராகி இசையமைத்துள்ளார். நடன மாஸ்டராக 300க்கும் மேற்பட்ட படங்களில் ப ணியாற்றிய சுவர்னா " நாதிரு தின்னா" படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி , நடன பயிற்சி அளித்து எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து தமது முதல் படமாக இயக்கி உள்ளார்.
Image
அம்மூச்சி 2 - விமர்சனம் நாயகி மித்ராவுக்கு  கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரது படிப்புக்கு அவரது தந்தை முட்டுக்கட்டையாக இருக்க, நாயகன் அருண் எப்படியாவது மித்ராவின் ஆசையை நிறைவேற்ற  வேண்டும் ஆசைப்படுகிறார்  இதுகுறித்து மித்ராவின் தந்தையிடம் பேசுகிறார். அதை ஏற்காத நாயகியின் தந்தை, அருணை அடித்துவிரட்டுகிறார். அதே சமயம் மித்ராவை ரவுடி ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கி றார். இறுதியில்  நாயகன் நாயகி மித்ராவின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே  ‘அம்முச்சி 2 படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகனாக வரும் அருண்,  சசி,, நாயகி மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ்பாலசந்திரன், நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே  கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். விவேக் சரோவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார கிராமத்தின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி ரசிகர்களை கிராமத்து மண்ணுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார். நட
Image
சுழல் தி வோர்டெக்ஸ் (வெப் சீரிஸ்)- விமர்சனம்)  சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருக்கும் பார்த்திபனின் இளைய மகள் திடீரென்று காணாமல் போய் விட அவரை தேடும் முயற்சியில் பார்த்திபன் இறங்குகிறார். அப்போது தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக பார்த்திபனை போலீஸ் கைது செய்கிறார்கள்.அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் களத்தில் இறங்கு தனது தங்கையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே பார்த்திபனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதிருக்கு அவரது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது.  அந்த ஆதாரத்தின் மூலம் அவள் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டிருக்கிறாள், என்பது தெரியவர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் வெப் சீரிஸ் சுழல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு  நத்தையாக நடித்திருக்கும் பார்த்திபன்  இயல்பாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரே ரெட்டி, கதாப்பாத்திரற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் இனத்த
Image
*பாலிவுட், கோலிவுட் பிரபலங்களின் பாராட்டை குவிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்'* *தனுஷ் முதல் வித்யா பாலன் வரையிலான கோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொண்டாடும் அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’* அமேசான் பிரைம் வீடியோவின்  முதல் நீண்ட வடிவிலான அசல் தமிழ் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்த வலைதள தொடர் உலகளாவிய அளவில் பார்வையாளர்களின் இதயங்களையும், அவர்களது ஆன்மாக்களையும் வென்றிருக்கிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி இந்த தொடர் மூலம் தங்களின் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த தொடரை பார்த்து ரசித்தவர்கள், இணையவாசிகள், திரைப்படத்துறையினர் என அனைவரும் கை வலிக்க கைகுலுக்கி படக்குழுவினரையும், இந்த தொடரையும் பாராட்டியுள்ளனர். பாலிவுட்டை சேர்ந்த இயக்குநர்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகை பூமிகா பட்நாகர், நடிகர் விக்ராந்த் மாஸே, எழுத்தாளர் சேத்தன் பகத், தயாரிப்பாளர் குனீத். மோங்கா, நடிகர் தனுஷ், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனி
Image
*ஆஹா 100% தமிழ் ஓ. டி..டி கொண்டாடும் ‘ஐங்கரன்’!* *முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு 'ஐங்கரன்' பட குழுவினர் பாராட்டு* *இளம் விஞ்ஞானிகளைக் கௌரவித்த 'ஆஹா' டிஜிட்டல் தளம்* *‘ஆஹா’ டிஜிட்டலில் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த  'ஐங்கரன்'.* ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி-யில் வெளியான ஐங்கரனின் டிஜிட்டல் பிரீமியர் கொண்டாட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் திறமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். பல எதிர்பார்ப்புகளுடன் ஜூன் 10-ஆம் தேதி ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி தளத்தில் வெளியான ‘ஐங்கரன்’, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.  இளம் விஞ்ஞானியை மையப்படுத்தி உருவாகி வெற்றி பெற்ற ‘ஐங்கரன்’ திரைப்படம், கடந்த வாரம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த படத்தின் கதையை போன்று தமிழகத்தில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து, நேரில் வரவழைத்து, ஐங்கரன் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்ட ஆஹா டிஜிட்டல் குழுமம் பார